india

img

கும்பமேளா சென்று திரும்பிய 99 சதவிகிதம் பேருக்கு கொரோனா.... அச்சத்தில் மத்தியப்பிரதேச மாநில மக்கள்....

போபால்:
மத்தியப் பிரதேசத்தில் இருந்துகும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவியதற்கு பிரதமர் மோடியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும், கும்பமேளா மூலம் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி அளித்ததும்தான் காரணம் என்று பல்வேறு மருத்துவ வல்லுநர்களும், அரசியல் கட்சித் தலைவர் களும் கூறி வருகின்றனர். ஆனால், பாஜக தலைவர்கள் இதனை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்நிலையில்தான், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு மத்தியப் பிரதேசத்திலிருந்து சென்று வந்தவர் களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், இதுவரை 100-க்கு 99 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்தற்போது தனிமையில் வைக்கப்பட் டுள்ளனர். அதே வேளையில் கும்பமேளா சென்றுவிட்டு திரும்பியவர்கள் யார், யார்? என எளிதில் கண்டறிய முடியாததால், மாநிலத்தில் இன்னும் எத்தனைபேர் கொரோனா பாதிப்புடன் உள்ளனர் என்பதையும், அவர்களிடம்இருந்து எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கும் என்பதையும் கணிக்க முடியாமல் அச்சம் நிலவுகிறது.

;